டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து போராடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ததற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது X பதிவில், எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு தவெக முழு ஆதரவை தெரிவிக்கிறது. நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

