நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக இதை தொடர்ந்து கூறி வருவதாக தெரிவித்த அவர், விவாதம் நடத்தப்படும் தேதி உள்ளிட்டவை அனைத்துக் கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு செய்யப்படும் என்றார். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நீட் விவகாரம் தொடர்பாக ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்த அரசு விரும்புவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

