ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ள தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ்-க்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தடகள வீராங்கனை பி.டி.உஷா 1984-ஆம் ஆண்டு படைத்த சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் வித்யா முறியடித்து, புதிய சாதனையை படைத்திருப்பது சிறப்புக்குரியது. அவரது வெற்றி, இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

