வைல்டு கார்ட் மூலம் எண்ட்ரி ஆன ஆனந்தி.. காபியால் வெடித்த சண்டை..

பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து லீடர், ஹவுஸ்மேட்ஸ் என அனைத்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக மாமன்றம் போன்ற அமைப்பில் பிக்பாஸ் நடைபெறுகிறது.

சமூகத்தில் அனைவரும் அரசியல் பேசி வரும் சூழலில், பிக்பாஸிலும் இந்த அமைப்பு உருவாகியுள்ளது. ஆளும் அணி மற்றும் எதிர் அணி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஆளும் அணியின் தலைவராக ஷாதிகாவும், எதிர் அணியின் தலைவியாக வினோத் பாபுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் வரலாற்றிலேயே முதல் முறையாக வித்தியாசமாக நடைபெற்றது. அதாவது, போட்டியாளர்களே ஒருவரை தேர்வு செய்து வெளியேற்றும் சூழல் ஏற்பட்டது. இதில் ஜனநாயக அடிப்படையில் சவின்யா வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து காமன் மேனில் தேர்வு செய்யப்பட்ட மணிவண்னனும், பிரபல நடிகை ஆனந்தியும் அடுத்தடுத்து வைல்டு கார்ட் மூலம் உள்ளே வந்தனர். இப்படி இருக்கையில் இந்த வாரம் ஷாமா லீடராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அடாவடி அன்சர் எதிர் அணி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனந்தி உள்ளே வந்த பிறகு அனைவரது ஆட்டத்தையும் திருப்பி வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே லக்‌ஷ்மி பிரியாவுடன் மோதல் போக்காகவே இருந்து வருகிறது. வந்த உடனே ஓவர் லேப் என்ற வார்த்தை ஆனந்தி சொல்லவே அதற்கு லட்சுமி பிரியா கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து இன்று வெளியான புரோமோவில், காபி சூடாக இல்லை என்ற பேச்சு தொடங்கி ஆனந்திக்கும் லட்சுமி பிரியாவுக்கும் கடும் சண்டை வெடித்துள்ளது. இதற்கான புரோமோ வெளியாகி பரபரப்பை தூண்டியுள்ளது. நேற்றைய எபிசோட்டில் உள்ளே வந்த ஆனந்தி முதல் நாளிலேயே க்ராசரி ஷாப்பிங் செய்து அனைவரிடமும் எதிர்ப்பை சம்பாதித்தார்.