முதலமைச்சர் விஜய்க்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறதா? என்று வி தி லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், பல்வேறு விவகாரங்களில் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது. இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சரின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

