அமெரிக்கா சார்பாக இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் சுமார் ரூ.33 ஆயிரம் கோடி ராணுவ நிதியுதவியை 2026-ம் ஆண்டின் இறுதியுடன் நிறுத்தவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியாக வலுவடைந்துவிட்டதால் இந்நிதியுதவி தேவையில்லை என்றும், ஆயுத விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ள அவர், பிரதமர் நெதன்யாகுவுடன் இது குறித்து ஏற்கனவே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

