இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நடத்திய முதற்கட்ட மதிப்பீட்டைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான உத்தேச மின் கட்டண உயர்வு 2.88 சதவீதத்திலிருந்து 1.46 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.”
அக்டோபர் – டிசம்பர் காலப்பகுதியில் 4.4 பில்லியன் ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்ற கணிப்பின் அடிப்படையிலேயே ஆரம்ப முன்மொழிவு தயாரிக்கப்பட்டிருந்தது.
காலாண்டுக்கான மொத்த மின் விநியோகச் செலவு 157.3 பில்லியன் ரூபாவாகவும், எதிர்பார்க்கப்படும் வருவாய் 154 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மின் விநியோக நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 1.1 பில்லியன் ரூபாய் கடன் திருப்பிச் செலுத்தும் செலவு மற்றும் தரம் குறைந்த நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகள் உள்ளிட்டவற்றை ஆணைக்குழு நீக்கியுள்ளது.
நீர்மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி குறைவடைவதன் காரணமாக, டிசம்பர் மாத மின் உற்பத்திச் செலவு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களை விட சுமார் 34 சதவீதம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு BMICH இல் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுக் கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தின் அடிப்படையிலேயே இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

