2029ல் பிரதமர் தேர்தலில் களமிறங்குகிறாரா விஜய்?..

தவெக கல்வி விருது வழங்கும் விழாவில் இன்று (நவ.4) பேசிய விஜய், தான் அரசியல் பேசவோ, வாக்கு சேகரிக்கவோ வரவில்லை எனத் தெரிவித்தார். “நான் இங்கு முதலமைச்சராக வரவில்லை; எப்போதும் போல உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன். உங்களுக்காகவும்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். 2029 தேர்தலுக்குத் தயாராகிறேன் என நினைக்க வேண்டாம். இப்போது உங்களுக்கு அரசியல் தேவையில்லை” என்றார். இதன் மூலம் அவர் 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக விஜய் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.