தமிழ்நாடு செய்திகள்
இபிஎஸ் உடன் இருந்தால் நல்லவன், இல்லாவிட்டால் நாங்கள் துரோகியா?

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பினர், அதிமுகவின் படுதோல்விக்கு இபிஎஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டினர்.
ஒருங்கிணைந்த அதிமுகவே தங்களின் ஒரே கோரிக்கை என்றும், பொதுக்குழு முடிவை ஏற்போம் என்றும் கூறிய அவர்கள், இபிஎஸ் ஒருபுறம் பேசலாம் என்று கூறிவிட்டு, மறுபுறம் தங்களைப் பதவியிலிருந்து நீக்குவதாகவும், மீண்டும் அதிமுக ஆள வேண்டும் என்பதே நோக்கம் என்றும் கூறினர்.




