வவுனியா, – கல்மடு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்துநேற்று 25 வயதுடைய பெண் ஒருவர் தலையில் காயங்களுடன் உடலமாகக் கண்டெடுக்கப்பட்டதையடுத்து ஈச்சங்குளம் காவல்துறையினர்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, உயிரிழந்த பெண்ணின் கணவர் (33), சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்திலிருந்து இரண்டரை வயதான தனது மகளுடன் தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது.
பின்னர், தமது சொந்த ஊரான ஏறாவூர் பகுதிக்கு சென்று, அங்குள்ள காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குடும்பத் தகராறு காரணமாக, சந்தேகநபர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் காவல்துறை மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news