ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போர் தொடுப்போம் என பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மையில் அதன் எல்லையில் மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன.
அதன்படி, தோஹாவில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டு கடந்த 19 ஆம் திகதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்கிடையே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே 2 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று துருக்கியின் இஸ்தான்புல்லில் ஆரம்பமானது. எனினும் அதன் முதல் நாளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இஸ்தான்புல்லில் ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரைத் தொடங்கும் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.
Tamilnewsstar Just another WordPress site
