மீண்டும் வெடித்த போர் – 33 பாலஸ்தீனியர்கள் பலி
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “சக்திவாய்ந்த தாக்குதல்களை” நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களை ஹமாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இஸ்ரேலிய படையினர் தாக்கப்பட்டமைக்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், போர் நிறுத்தத்துக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் உபகரணப் பற்றாக்குறையால் மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக உள்ளதாகவும், சப்ரா மற்றும் கான் யூனிஸ் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருடன் உள்ள பணயக்கைதிகளைத் திருப்பி அளிக்கும் முதல் கட்ட ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதில் ஹமாஸ் விதிமுறைகளை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் பணயக்கைதிகள் விவகாரத்தில் பதற்றம் நீடிக்கிறது.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news