புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவை
பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கான நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும், புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது இயக்கப்படும் சிசு செரிய உட்பட அனைத்து பேருந்து சேவைகளும், பாடசாலை புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் ஐந்து முதல் தரம் 13 வரையான அனைத்து வகுப்புகளுக்கான நேரமும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படுவதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news