தமிழகத்தில் மழை தொடருமா?
தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பில்லை என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் 93 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் இருக்கும் என்று கணித்துள்ளது.
மத்திய மேற்குவங்கக் கடலில் நிலவிய மொந்தா புயல், ஆந்திராவில கரையை கடந்து தொடர்ந்து வலுவிழந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இதேபோன்று, வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக 93 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news