இன்றைய ராசிப்பலன் – 03.10.2025
இன்றைய பஞ்சாங்கம்
03-11-2025, ஐப்பசி 17, திங்கட்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 02.06 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 03.05 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். ஸோம பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் – 03.10.2025
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் உங்களின் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் குறையும்.
ரிஷபம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.
கடகம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் நிலவும். எதிலும் பொறுமையுடனும் சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும்.
சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கன்னி
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.
துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.
தனுசு
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
மீனம்
இன்று நீங்கள் மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news