இன்றைய ராசிப்பலன் – 02.11.2025
இன்றைய பஞ்சாங்கம்
02-11-2025, ஐப்பசி 16, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி காலை 07.32 வரை பின்பு துவாதசி திதி பின்இரவு 05.07 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.03 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் மாலை 05.03 வரை பின்பு அமிர்தயோகம். ஏகாதசி விரதம். (திருக்கணிதம்) பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
இன்றைய ராசிப்பலன் – 02.11.2025
மேஷம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் மனநிம்மதி குறையும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சுப செலவுகள் உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு பகல் 11.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறைந்து மனஅமைதி ஏற்படும்.
சிம்மம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.27 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
கன்னி
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நவீன பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
துலாம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும்.
விருச்சிகம்
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
தனுசு
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் பண நெருக்கடிகளை சமாளிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
கும்பம்
இன்று பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கையிருப்பு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.
மீனம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news