நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான அவரது தொடர்புகளே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரம்ப விசாரணையில் இந்த அச்சுறுத்தல்கள் அத்தகைய தொடர்புகளுடன் தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தற்காலிக காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, ஆனால் இது அரசியல் நோக்கத்துடன் கூடிய பிரச்சினை அல்ல.
பாதாள உலகம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களுடனான அவரது கடந்தகால கொடுக்கல் வாங்கல்களே என புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக காவல்துறை மா அதிபர் கூறினார்.
மேலும், ஜகத் விதானவின் கோரிக்கையைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்புக்காக இரண்டு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இதன்படி, அச்சுறுத்தலின் மூலத்தை உறுதிப்படுத்தவும், இதில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் காணவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.
இலங்கையின் முக்கிய செய்திகள் – 27.10.2025 | Sri Lanka Tamil News
Tamilnewsstar Just another WordPress site
