Monday , 3 November 2025

தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறப்பு!

Spread the love

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலயம் இன்று யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர ஆளுகைக்குள் உள்ள இலக்கம் 58, சேர் பொன் இராமநாதன் வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடன் மன்னார், வவுனியா மாவட்டங்களின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்..

நிகழ்வில் இறுதியில் கட்சியின் மகளிர் அணியினரின் ஏற்பட்டில் பாடசாலை மாணவி ஒருவருக்குக் சைக்கிள் ஒன்று வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Check Also

இன ரீதியாகச் செயற்படும் அரசு! – விக்கி காட்டம்

Spread the love“பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் …