Wednesday , 5 November 2025
கனமழை

திடீரென கொட்டி தீர்த்த கனமழை

Spread the love

திடீரென கொட்டி தீர்த்த கனமழை

சென்னையில் நேற்று காலையில் லேசான மழை பெய்த நிலையில், பின்னர் வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த சூழலில், மாலையில் திடீரென மழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், அலுவலகம் முடிந்து வீடு திரும்பியோர் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழையால், சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று காலையில் லேசான மழை பெய்த நிலையில், பின்னர் வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த சூழலில், மாலையில் திடீரென மழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், அலுவலகம் முடிந்து வீடு திரும்பியோர் அவதிக்கு உள்ளாகினர்.

புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் கனமழை பெய்தது. பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், வாகனஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். சேலையூரில் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்துசென்றன.

இதேபோல, பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், சென்னீர்குப்பம், வேலப்பன்சாவடி பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் நீச்சல் குளம்போல் நீர் தேங்கியது.

இதனால், வாகனஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். அந்த சாலையில் அமைந்துள்ள லாரி ஷோரூம் முன்பு மழைநீர் தேங்கிய நிலையில், 300-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி மழைநீர் உள்ளே புகாமல் தடுக்கப்பட்டது.

திருவாரூரில் பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, விஜயபுரம், வாளவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ஏற்கனவே வயலில் தேங்கிய மழை நீரை வடியவைத்து தற்போது பூச்சி மருந்து அடித்து வரும் நிலையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இலங்கையின் முக்கிய செய்திகள் – 05.11.2025 | Sri Lanka Tamil News

Check Also

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் – 05.11.2025

Spread the loveஇன்றைய ராசிப்பலன் – 05.11.2025 இன்றைய பஞ்சாங்கம் 05-11-2025, ஐப்பசி 19, புதன்கிழமை, பௌர்ணமி திதி மாலை …