Wednesday , 5 November 2025
தவெக

தவெக இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்

Spread the love

தவெக இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் விஜய் தலைமையில் இன்று காலை தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

அழைப்பு கடிதம் அல்லது அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் தவெக-வின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கரூரில் விஜயின் தவெக பரப்புரையின் போது பாதுகாப்பில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

எஸ்ஐடி குழுவிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்து, கடந்த 17 ஆம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை பேக்கரி கடை உரிமையாளர், இ-சேவை மைய உரிமையாளர், எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் என 25க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தவெக பரப்புரையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த 12 காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக 8 காவலர்களிடமும் அதன்பிறகு 4 காவலர்களிடமும் விசாரணை நடைபெற்றது.

5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது. அவர்களை தொடர்ந்து 7 காவல் உதவி ஆய்வாளர்கள் ஆஜராகி சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர். சம்பவத்தின் போது பணியில் இருந்த 10 உதவி ஆய்வாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், 7 பேர் ஆஜராகினர்.

முதல்கட்ட பிரசாரம் நிறைவு… நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

Check Also

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் – 05.11.2025

Spread the loveஇன்றைய ராசிப்பலன் – 05.11.2025 இன்றைய பஞ்சாங்கம் 05-11-2025, ஐப்பசி 19, புதன்கிழமை, பௌர்ணமி திதி மாலை …