Monday , 3 November 2025
இன்று

இன்று வெயில் கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Spread the love

இன்று வெயில் கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதிகளில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகக் கூறியுள்ள வானிலை மையம், இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேச கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் என்று கணித்துள்ளது.

மேலும், கிழக்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்ப நிலையை பொருத்த வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

Check Also

பப்ஜி விளையாட்டில் சிக்கி கடனில் மூழ்கிய யாழ் இளைஞன்

பப்ஜி விளையாட்டில் சிக்கி கடனில் மூழ்கிய யாழ் இளைஞன்

Spread the loveபப்ஜி கேம் எனப்படும் இணையவழி விளையாட்டு இன்று இளம் சமூகத்தினரை பல்வேறு வகையிலும் அச்சுறுத்தி வருகிறது. இதனை …