Friday , 31 October 2025
அரசாங்கம்

அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை தன்னிச்சையாக பின்வாங்கி இருக்கிறது.

Spread the love

அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை தன்னிச்சையாக பின்வாங்கி இருக்கிறது.

இது தொடர்பாக இன்றைய தினம் போலீஸ் ம அதிபர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அது தவிரவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற்ற போது ஐரோப்பாவில் இருந்து Zoom மூலம் தொடர்பு கொண்டேன்.

இதன் போது தற்போதைய நிலையில் ஒரு வைத்தியராக எனக்கு போதை வஸ்து கடத்தல் காரர்கள் மற்றும் பாதாள உலகம் குழுக்களில் இருந்து உயிராபத்து வராது என்பதை தெளிவாக தெரிவித்து இருந்தேன்.

தற்போதைய நிலையில் எனது உயிருக்கு பங்கம் விளைவிக்க முனைவது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் போலீசார் என்பதை பாராளுமன்ற சபாநாயகர் இடம் தெரிவித்த போது பாராளுமன்ற சபாநாயகர் இது ஒரு நான்சென்ஸ் ஸ்டாக் (This is a nonsense talk”) என்று நேரடியாக தெரிவித்திருந்தார்.

தமிழருக்கு நடைபெற்ற இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளாத அனுரகுமாரசதிநாயக்க அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் நான் கொண்டு வரவிருக்கும் இனப்படுகொலை தொடர்பான வழக்கினை பாரதூரமாக பார்க்கிறது.
தனி ஒருவனாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்தது என்பதை இன்னும் ஒரிரு நாட்களில் பதிவு செய்கிறேன்.

இதனை பதிவு செய்த பின்னர் இலங்கைக்கு நான் வருகின்ற போது ஐக்கிய நாடுகள் சபையான சாட்சியாக இருந்தும் எனக்கு உயிர் ஆபத்து உயிரச்சுறுத்தல் ஏற்படப்படுவது தற்போதைய அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சபாநாயகர் அது தவிரவும் அரசாங்கத்தின் கைக்கூலியாக செயல்படுகின்ற போலீசார் ஆகியோரால் மட்டுமே ஒழிய எனக்கு எந்த பாதாள உலக குழுக்களுடனும் தொடர்பு என்று அல்லது போதை வஸ்து கடத்த காரர்களுடன் தொடர்பு என்றும் சித்தரிக்க முடியாது.

இந்த விடயத்தை கதைத்த போது சபாநாயகர் எனது Zoom மூலமாக இணைப்பை துண்டித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் பேச அனுமதிக்கவில்லை.

போலீசார் பாதுகாப்பு தராத சந்தர்ப்பங்களில் என்னுடைய சுய பாதுகாப்பிற்காக ஆபத்து அற்ற பாதுகாப்பு கருவிகளை வைத்திருப்பதற்காக நான் கேட்ட கடிதத்திற்கு கூட சபாநாயகர் அது தொடர்பான அமைச்சரிடம் அதனை கேட்க சொல்லி கடிதம் அனுப்பி இருந்தும் அதனை பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களிடம் தொலைபேசியில் அழைப்பெடுத்து கேட்ட போது அந்த கடிதத்தை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியதாக கூறிய போதும் இதுவரை கடிதத்துக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலைமையிலும் கூட நான் என் சொந்த மண்ணுக்கு திரும்பி வருவது என் மக்களுக்காக நான் செய்யக்கூடிய எனது கடைசி கடமையாக நான் கருதுகிறேன்.

எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு 100% பொறுப்பு பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபர் என்பதை மிகத் தெளிவாக பொதுமக்களுக்காக இங்கே பதிவிட விரும்புகிறேன்.

இந்த முகப்புத்தகம் எனது ஒபிஷியல் முகப்புத்தகமாக இருக்கின்ற காரணங்களினால் சமூக ஊடகங்களுக்கான நேரடியான எனது அறிவித்தல் இதுவாகும் என்பதில் நான் ஆழமான கரிசனை கொண்டுள்ளேன்.

எது எப்படியோ, ஈழத்திலிருந்து ஒருவன் ஆவது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி வரை ஒரு இனம் அழிக்கப்பட்டது என்பதை சர்வதேசத்திற்கு முதன் முதலாக எழுத்து மூலமாக சத்தியகடதாசி மூலமாக இன்னும் இரண்டு நாட்களில் சமர்ப்பிக்க இருக்கிறேன்.

நடப்பது நடக்கட்டும்..
பயந்த இனம் அல்ல!
பயம் காட்டிய இனம் காட்டிக் கொண்டிருக்கின்ற இனம் நாம் என்பதை வரலாறு சொல்லட்டும்!

இப்படிக்கு
பாராளுமன்ற உறுப்பினர்
இராமநாதன் அர்ச்சுனா

Check Also

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மு.கா. இன் குச்சவெளி பிரதேச சபை தலைவர் கைது!

Spread the loveகுச்சவெளி பிரதேச சபையின் தலைவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது …