Friday , 31 October 2025
வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு

வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு

Spread the love

வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மின் துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு கணக்கு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு 2024 -2025 நிதி ஆண்டுக்கான வீடுகளின் மின் கட்டண உயர்வு கடந்த 2024 ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, புதுச்சேரியில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு ஒரு யூனிட் மின் கட்டணம் ரூ. 2.70ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு புதுச்சேரி பொதுமக்கள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருந்தபோதிலும், யூனியன் பிரதேசத்தில் மின் கட்டணம் அமலுக்கு வந்தது.

இந்தநிலையில், இன்று மீண்டும் புதுச்சேரி அரசு மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.70ஆக இருந்த மின் கட்டணம் தற்போது 2.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

101 முதல் 200 யூனிட் வரை ரூ. 3.25 என்பதில் இருந்து ரூ. 4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ. 5.40 என்பதில் இருந்து ரூ. 6 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ. 6.80 என்பதில் இருந்து ரூ. 7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மின் கட்டணம் உயர்வு குறித்து நியூஸ்18க்கு பேட்டி அளித்த புதுச்சேரி மின் துறை அமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரியில் மின்சாரம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்வை மானியமாக அரசே ஏற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

வைல்டு கார்டு மூலம் உள்ளே செல்லும் 4 பேர் இவர்கள் தான்

Check Also

ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம்

ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம்

Spread the loveரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய …