சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 07பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி – இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலி காட்டில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். இதன்போது பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீது தாக்கி விட்டு தப்பியோட முற்பட்ட ஏழு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான இரண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்தினை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சாகர குலசேகர உள்ளிட்டோர் பார்வையிட்டனர். சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news