Monday , 3 November 2025

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Spread the love

யாழ்ப்பாணம் நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 200 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த
இரகசியத் தகவலுக்கமையவே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.

யாழ். கஸ்தூரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்தவர்களைச் சோதனையிட்டபோதே அவர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஐந்து சந்திப் பகுதி அருகில் வசிக்கும் 21 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் தொடர்பாக பொலிஸாரின் கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தட்டுப்பாடு காரணமாக சந்தேகநபர்கள் பத்து போதை மாத்திரைகள் அடங்கிய அட்டையை 3 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Check Also

இன ரீதியாகச் செயற்படும் அரசு! – விக்கி காட்டம்

Spread the love“பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் …