Monday , 3 November 2025
பப்ஜி விளையாட்டில் சிக்கி கடனில் மூழ்கிய யாழ் இளைஞன்

பப்ஜி விளையாட்டில் சிக்கி கடனில் மூழ்கிய யாழ் இளைஞன்

Spread the love

பப்ஜி கேம் எனப்படும் இணையவழி விளையாட்டு இன்று இளம் சமூகத்தினரை பல்வேறு வகையிலும் அச்சுறுத்தி வருகிறது.

இதனை உணர்த்தும் வகையில், யாழ்ப்பாணத்தில் ஒரு அசம்பாவித சம்பவம் பதிவாகியுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணத்தில், பப்ஜி கேம்க்காக இளைஞர் ஒருவர், வாங்கிய கடன், வட்டியும் முதலுமாக ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த கடனுக்கு ஆளாகியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த இளைஞனைக் கடனிலிருந்து மீட்டெடுக்க, அவரது தாய் தனக்குச் சொந்தமான காணியை விற்பனை செய்து, அவரை அந்த கடனிலிருந்து மீட்டுள்ளார்.

எனினும், குறித்த இளைஞன் மீண்டும் அந்த பப்ஜி விளையாட்டைத் தொடர்வதற்காக, தனது தாயாரிடம் சுமார் 5 இலட்சம் ரூபாயைக் கோரியுள்ளார்.

இதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், மன விரக்திக்கு உள்ளான இளைஞன் தவறான முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று அதிகளவான சிறுவர்களும், இளம் சமூகத்தினரும், தமது கையடக்க ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்தி பப்ஜி என்ற இந்த இணையவழி விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

இதனால், தன்னை அறியாமையிலேயே அவர்கள், உள மற்றும் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, இது தொடர்பாக, பெற்றோர்களும், அவர்களின் பாதுகாப்பு சார்ந்தவர்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Check Also

தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறப்பு!

Spread the loveதமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலயம் இன்று யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் …