முள்ளங்கியை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மையா ?
முள்ளங்கியில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, குளுக்கோசினோலேட்டுகள், வைட்டமின் B7 மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, செரிமானத்தை மேம்படுத்தி, கல்லீரலுக்கு நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது.
குளிர்கால காய்கறிகளில் இந்தியாவில் முள்ளங்கி முக்கியமானது. இது நீர்ச்சத்து நிறைந்த வேர் காய்கறியாகும்.
முள்ளங்கி சமையலுக்கு பயன்படுவதையும் தாண்டி பல மருத்துவ நோக்கங்களையும் கொண்டுள்ளது. முள்ளங்கியில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
முள்ளங்கியின் இலைகள், பூக்கள், காய்கள் மற்றும் விதைகள் என தாவாத்தின் அனைத்து பகுதிகளும் உணவாக பயன்படுகின்றன. முள்ளங்கியில் ஏராளமான எண்ணெய் கலவைகள் உள்ளன.
முள்ளங்கியை சமைத்தோ, பச்சையாகவோ அல்லது ஊறுகாயாகவோ, துவையலாகவோ கூட செய்து சாப்பிடலாம்.
முள்ளங்கியினை ஏன் குளிர்காலத்தில் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
முள்ளங்கியில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ரசாயன கலவைகள் உள்ளன. எனவே முள்ளங்கியை சாப்பிடுவதால் உடலின் இயற்கையான அடிபோனெக்டிக் (புரத ஹார்மோன்) உற்பத்தியையும் இது மேம்படுத்துகிறது.
மேலும், முள்ளங்கியில் நீரிழிவு நோய் உருவாவதைத் தடுக்க உதவும் ஆக்சிஜனேற்ற ஆற்றலும் உள்ளது. அதனால், முள்ளங்கியை தவிர்க்காமல் அதிகமாகவே பயன்படுத்த வேண்டும். உடலில் சருமத்துக்கு அடுத்து மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்.
உடலில் நோய்த் தொற்று ஏற்படும்போது தானாகவே அதனை சரிசெய்து கொள்ளும் குணம் இந்த கல்லீரலுக்கு உண்டு.
முள்ளங்கியில் கல்லீரல் நச்சுத்தன்மை மற்றும் கல்லீரல் சேதத்தில் இருந்து பாதுகாக்கும் கலவைகள் உள்ளன.
மேலும் இந்த கலவைகள் சீறுநீரகங்களில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகின்றன.
முள்ளங்கியில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
மேலும், முள்ளங்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் நைட்ரேட்டுகளை அதிகமாகக் கொண்டுள்ளன.
முள்ளங்கி இயற்கையாகவே பூஞ்சை காளான் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களை எதிர்க்கும் திறனைக் கொண்டுள்ளது.
இது, பொதுவாக பூஞ்சை தொற்றுநோய்களின் உயிரணு இறப்பிற்கு உதவும் ஒரு பூஞ்சை காளான் புரதத்தைக் கொண்டுள்ளது.
இதனைக் கொண்டே இவை பூஞ்சைக் காளான்களை எதிர்க்கின்றன. முள்ளங்கி சாறானது வீக்கத்தை குறைக்கவும், சிறுநீர் பாதையில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் கோளாறுகள் மற்றும் சிறுநீர் வரும்போது சிலருக்கு ஏற்படும் எரிச்சல் உணர்வு போன்றவற்றைக் குறைக்கவும் சிறப்பாக செயல்படுகிறது.
சிறுநீரக அமைப்பிலிருந்து அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் முள்ளங்கி உதவுகிறது. இவ்வாறு பல நன்மைகளை கொண்ட முள்ளங்கியினை அன்றாடம் சமையலில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை பயக்கும்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news