உலக செய்திகள்
நேட்டோ கனவைக் கைவிடுகிறோம்: உக்ரேனிய அதிபர்
நேட்டோ கனவைக் கைவிடுகிறோம்: உக்ரேனிய அதிபர்
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேரும் கனவைக் கைவிடுவதாக அறிவித்திருக்கிறார்.
அந்தக் கனவுதான் போருக்குக் காரணம் என்று ரஷ்யா திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறது.
ஜெர்மானியத் தலைநகர் பெர்லினில் (Berlin) அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கொஃப்புடன் (Steve Witkoff) பேச்சைத் தொடங்குவதற்குமுன் ஸெலன்ஸ்கி பேசினார்.
ஐரோப்பா, ஜப்பான் போன்றவற்றுக்குத் தந்திருப்பதைப் போன்ற பாதுகாப்பு உத்தரவாதத்தை உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் பிரதான செய்திகள் – 15.12.2025




