முடிவுக்கு வருகிறதா ரஷ்யா – யுக்ரைன் போர்?

முடிவுக்கு வருகிறதா ரஷ்யா – யுக்ரைன் போர்?
ரஷ்யா மற்றும் யுக்ரைன் போர் தொடர்பான இராஜதந்திர பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை, புளோரிடாவில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போது, அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், ரஷ்யா மற்றும் யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்தநிலையிலே, யுக்ரைன் அமைதித்திட்ட பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதன்படி, ட்ரம்ப் முன்வைத்த 20 அம்ச அமைதித்திட்டம் 90சதவீதம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக, யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதே நேரம், யுக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் 95சதவீதம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள்




