உலக செய்திகள்

மெர்கோசூர் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

Spread the love

மெர்கோசூர் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பான மெர்கோசூர் (Mercosur) ஆகியவற்றிற்கு இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்தானது.

சுமார் 25 ஆண்டுகளாக இழுபறியிலிருந்த இந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது வெற்றியில் முடிந்துள்ளன.

இது உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக வலயங்களில் ஒன்றை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் மற்றும் மெர்கோசூர் அமைப்பில் உள்ள பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகள் இதில் அடங்கும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான சுங்க வரிகள் பெருமளவு குறைக்கப்பட்டு, விவசாயம் மற்றும் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி ஊக்குவிக்கப்படும் எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வரி விதிப்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button