அமெரிக்காவில் அதிரடி முடிவு

அமெரிக்காவில் அதிரடி முடிவு
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்க க்ரீன் கார்ட் விசா லொட்டரி திட்டத்தை நிறுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இத்துப்பாக்கிச் சூட்டின்போது போர்த்துக்கீசரான நெவ்ஸ் வாலண்டே என்ற நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அந்த நபர் 2017ஆம் ஆண்டில் பன்முகத்தன்மை லொட்டரி விசா திட்டத்தின் (DV1) மூலம் அமெரிக்காவிற்குச் சென்று, அங்கு க்ரீன் கார்ட் பெற்றுக்கொண்ட ஒருவரென தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டே ட்ரம்ப், இவ்விசா லொட்டரி திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய திட்டத்தால் இனி அமெரிக்கர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ட்ரம்பின் வழிகாட்டுதலின் கீழ் க்றீன் கார்ட் விசா திட்டத்தை இடைநிறுத்த அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் “நெவ்ஸ் வாலண்டே போன்ற கொடூரமான நபர் நம் நாட்டுக்குள் வர ஒருபோதும் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது” என்றும் நோயம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக பன்முகத்தன்மை விசா லொட்டரி திட்டத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த ட்ரம்ப். அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை சுட்டிக்காட்டி, இத்திட்டத்தை நிறுத்துவதாக உறுதிபட அறிவித்திருக்கிறார்.
அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம்




