ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 29 வயது பெண்

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 29 வயது பெண்
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு தொண்டு மருத்துவமனையில் 29 வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக தெரிக்கப்பட்டுள்ளது.
“தாய் மற்றும் அவரது நான்கு குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, நாங்கள் அறுவைசிகிச்சை மகப்பேறு செய்ய முடிவு செய்தோம். இந்த சவாலான அறுவை சிகிச்சை ஒரு மணி நேரம் நீடித்தது,” என்று ரீ இந்தூர் மருத்துவமனையின் மருத்துவர் ஆதித்யா சோமானி குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த குழந்தைகளின் எடை 800 கிராம் முதல் 1.5 கிலோகிராம் வரை இருக்கும் என்று ஆதித்யா சோமானி தெரிவித்துள்ளார்.
மேலும், “எங்கள் மருத்துவமனையில் ஒரு பெண் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுப்பது இதுவே முதல் முறை. தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி




