தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் – செங்கோட்டையன்

Spread the love

பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் – செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் துரோகிகளுக்கான நோபல் பரிசு கொடுப்பது என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் எனக்கூறி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இதனால், அவரது கட்சி பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்ட நிலையில், உறுப்பினராக தொடர்ந்தார்.

இதனிடையே, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை அன்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து கூட்டாக மரியாதை செலுத்தினார்.
மேலும், சசிகலாவையும் சந்தித்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

இலங்கையின் முக்கிய செய்திகள் – 01.11.2025 | Sri Lanka Tamil News

Related Articles

Back to top button