சிறந்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறந்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியால் அலங்காநல்லூரே குலுங்கியது.
காலை 7 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் ஜல்லிகட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்ட நிலையில், அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு சுற்று வீதம் 10 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் 500க்கும் மேற்பட்டோர் களமாடினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் களம் இறக்கப்பட்டன.
இதற்கிடையே மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள் மற்றும் அதனை தீரத்துடன் காளையர்களை அடக்கியதை கண்டு களித்தார். ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை மிரள வைத்த காளைகளின் உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் தங்க மோதிரம் பரிசளித்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர், ஜல்லிக்கட்டு வீரர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்றார். தொடரந்து பேசிய அவர், அலங்காநல்லூரில் 2 கோடி ரூபாய் மதிப்பில் காளைகளுக்கான பயிற்சி மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று கூறினார்.
மெர்கோசூர் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து




