“எம்.ஜி.ஆரின் பெயரை மறைக்க திமுக அரசு முயற்சி..” எடப்பாடி பழனிசாமி

“எம்.ஜி.ஆரின் பெயரை மறைக்க திமுக அரசு முயற்சி..” எடப்பாடி பழனிசாமி
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் பெயரை மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1981-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அண்ணா பிறந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது என்று உள்ளதே தவிர, அதனை தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இணையதள போட்டோ கேலரியில் இருந்த எம்.ஜி.ஆரின் படமும் நீக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். வன்மத்தை கைவிட்டுவிட்டு, எம்.ஜி.ஆரின் படத்தை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டுமெனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
டக்ளசை தொடர்ந்து சிறையில் அடைக்க ஆயத்தம்!!




