கனமழை எதிரொலி – பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி – பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழக உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், குறிப்பாக இன்று அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதல் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முக்கிய செய்திகள் – 06.11.2025 | Sri Lanka Tamil News




