இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை

இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை
இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக நலமுடன் இருப்பதாக அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு சில மாதங்களாக பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். அதன்பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். இந்நிலையில் கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறைவால் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாரதிராஜாவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையற்ற வதந்திகள் பரப்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு



