வங்கக்கடலில் 26 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் 26 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் வரும் 26 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை 5.30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததாகவும், நாளை இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையும் எனவும் இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலில் நாளை வரை மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும் அதன் பின் 25 ஆம் தேதி மாலையில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
பின்னர் 26 ஆம் தேதி காலையில் இருந்து காற்றின் வேகம் படிபடியாக அதிகரித்து 80 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகம் வரை புயல் காற்று வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்கள் நாளைக்குள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
செய்தியாளரை ஒருமையில் திட்டிய சீமான்




