பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மகாணங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழச்சி பதிவாக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்




