தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள்

தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள்
நான் சு. பொன்னையா. 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈபிடிபி இயக்கத்தில் இருந்தேன்.
அந்தக் காலத்தில் நடந்த மிகச் சீரழிந்த, மனிதநேயத்துக்கு எதிரான சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன்
சிலவற்றில் நானும் உடன் இருந்திருக்கிறேன் நான் எதற்கும் பயப்படவில்லை.
உண்மையை சொல்ல வந்திருக்கிறேன்.தினமுரசு நாளிதழின் ஆசிரியர் பத்திரிகையாளர் நடராஜா அற்புதராஜா, மகேஸ்வரி வேலாயுதம் ஆகிய இருவரையும் வி*டுதலைப் பு*லிகள் செய்தது என்று கூறி, நாமே கொ*ன்றோம்.
அந்தக் கொ*லைகளுக்கு புலிகள் எந்தத் தொடர்பும் இல்லை.ஆனால் உலகிற்கு “புலிகள் செய்தார்கள்” என சொன்னோம் ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களையும் எங்களில் சிலர் திட்டமிட்டு கொ*ன்றார்கள்
அந்தக் கொ*லையில் தொடர்புடையவர்கள் சிலர் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள்.
சிலர் வெளியேறியிருக்கின்றார்கள் உதயன் நாளிதழ் மீது தாக்குதலையும் இராணுவமும், ஈபிடிபியும் சேர்ந்து செய்தார்கள்.
குறித்த தாக்குதலில் ராஜன், திவாகரன் ஆகிய ஈபிடிபி உறுப்பினர்கள் காயமடைந்தார்கள்
இருவரும் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள்.
அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல், அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த Masterminds, யாரெல்லாம் தூண்டினார்களோ – எல்லோரும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள்.
எந்தப் பயமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
நெல்லியடி, புங்குடுதீவு, காரைநகர், யாழ்ப்பாணம், வவுனியா எங்கும் பொதுமக்கள் இராணுவத்தினருடன் இணைந்து ஈபிடிபியினரால் தான் கடத்தப்பட்டார்கள்.
கொ*லை செய்யப்பட்டார்கள். சிறுமிகளும், மாணவர்களும் என பலர் காணாமலாக்கப்பட்டார்கள்
ஈபிடிபி யின் சாவகச்சேரி அமைப்பாளர் சார்ள்ஸ் தான் இந்த ஆட்கடத்தல்களுக்கு பின்னால் இருந்த Operation lead.
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்தே வேளை, அங்குள்ள மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற போது 15 – 20 பேர் அளவில் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை டக்ளஸ் தேவானந்தா பார்க்க வேண்டும் என சொல்லி இராணுவத்தினரிடம் கேட்டு , நாங்கள் நேரில் சென்று அவர்களை பார்த்தோம்.
அவர்களில் ஒரு 13 வயதுடைய சிறுவனும் இருந்தான்.
நாங்கள் பார்த்து வந்த சில நிமிடங்களில் வெ$டி சத்தம் கேட்டது. அத்தனை பேரையும் சு*ட்டு கொ*ன்று விட்டார்கள்.
அவ்வேளை அங்கிருந்த அரச உத்தியோகஸ்தரான நிக்லஸ் என்பவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தனர்.
அவர் தான் நேரில் வர மாட்டேன் என கூறியதும் அவரை அ*டித்து சி*த்திரவதை செய்த வேளை , அவர் உயிரிழந்து விட்டார்.
பின்னர் அவரின் உடலை தூக்கில் தொங்க விட்டனர். யாரும் விசாரிக்கவில்லை. ஒரு கேள்வியும் இல்லை.
ஏனெனில், எங்களை இராணுவத்தினர் பாதுகாத்தார்கள்
எங்களுடன் இருந்த 6 உறுப்பினர்கள், பு*லிகளுடன் இணைய முயன்றார்கள். அவர்களை வெ*ட்டிக் கொ*ன்றது யாரென்று தெரியுமா?
எங்களுடன் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி. அவரே வெ*ட்டிக் கொன்ற கத்தியுடன் வந்து, கூட்டம் நடத்தினார்.
முன்னாள் வானொலி அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா இந்தியாவில் இருந்தார். டக்ளஸ் தேவானந்தாவே அவரை அழைத்து வந்தார்.
பின்பு அவர் மீண்டும் ஒலிபரப்பு சேவைக்கு சேரலாம் என்ற தகவல் வந்ததும், அவர் நமது சில இரகசியங்களை வெளியே சொல்லக் கூடும் என்ற பயத்தால் அவருக்கு மதுவில் ந*ஞ்சு கொடுத்தோம். அவரும் செ*த்து போனார்.
மலையகத்தை சேர்ந்த மோகன், விஜி, யாழில் பாண்டியன், ஊர்காவற்றுறையில் கிளி – ஆகியோர் எங்களில் சிலருக்கு விரோதமாக நடந்ததால் நாமே அவர்களை கொ*ன்றோம்.
அவர்களை மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி அவர்களின் உடல்களை பொ*சுக்கினோம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கொலை செய்து , கடற்கரையில் அவரின் உடலை போட்டோம்
அதே போல ஈ.பி.டி.பி க்கு சொந்தமான கொழும்பு பார்க் வீதியில் இருந்த வீட்டில் பல கொ*லைகள் நடைபெற்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான உத்தரவு – நம்முடைய முன்னாள் எம்.பி மதனராஜாவிடமிருந்து தான் வந்தது.
பாதுகாப்பு அமைச்சகம் மாதாந்தம் எங்களுக்கு சம்பளத்தை அனுப்பியது.
மஹிந்த ராஜபக்சே காலத்தில் எங்கள் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபாய் வரை கணக்குக் காட்டி டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அமைச்சிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஆனால் எங்களுக்கு ரூபா 10,000 – ரூபா 15,000 வரையில் சம்பளம் வழங்கினார்கள்.
கட்சியிலிருந்து விலகும் வரை மாதாந்தம் ரூபா 3,000 வரை EPF/ETF சேமிப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அடிப்படை வேதனம் கேட்ட சிலரை கூட டக்ளஸ் தேவானந்தா இல்லாமல் ஆக்கியுள்ளார்
இவ்வாறு மிக நீண்ட ஆதாரங்களை ஈபிடிபி அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சு. பொன்னையா (சதா) என்பவர் திரு மைத்திரிபால சிறிசேன – திரு ரணில் விக்ரமசிங்கே அரசாங்க காலத்தில் குறைபாடாக முன்வைத்திருந்தார்
பின்னர் தற்போது ஜேவிபி அதிகாரத்திற்கு வந்த பின்னர் மீண்டும் பொலிஸ் தலைமையகம் முதல் பலவேறு தளங்களில் முறைப்பாடுகளாக வழங்கியிருக்கின்றார் எத்தகைய விசாரணைகளுக்கு அழைத்தால் சாட்சியம் அளிப்பதாகவும் சொல்லியிருக்கின்றார் ஆனால் இந்த குற்றச்செயல்களில் இராணுவம் சம்பந்தப்பட்டு இருப்பதால் நல்லாட்சி ஆட்சியாளர்கள் போல ஜேவிபியும் முறைப்பாட்டை ஏற்று கொள்ள தற்போது வரை தயாரில்லை
இராணுவ ஒருங்கிணைப்பில் தான் அப்பாவி தமிழ் மக்கள் வேட்டையிடப்பட்டு இருக்கின்றார்கள் என்பது பகிரங்கமாகி விடும் என்பதால் முறைப்பாட்டாளரை அலைக்கழிக்கின்றார்கள்
குறிப்பாக அப்பாவி தமிழ் மக்களை வேட்டைடைய பாதுகாப்பு அமைச்சு மாதாந்தம் பணம் செலவளித்திருக்கின்றது என்கிற அசிங்கம் தெரியாமல் இருக்க நாடகமாடுகின்றார்கள்
இருப்பினும் பிரதான சூத்திரதாரிகளான இராணுவ கட்டமைப்புகளை தெளிவாகவிருக்கும் ஜேவிபி ஆட்சியாளர்கள் தேவைகள் முடிவடைந்த நிலையில் கடுமையாக தண்டிக்க வேண்டிய ஓட்டுகுழு அம்புகளை களத்திலிருந்து அகற்ற சில்லறை வழக்குகளை நடத்தி நாடகமாடுகின்றார்கள்.
நன்றி
இனமென்றின் குரல்
டக்ளஸ் தேவானந்தாவின் கைதும் பிள்ளையானின் கைதும்…?




