இலங்கை செய்திகள்

வெளிநாட்டு இலங்கைத் தொழிலாளர்கள் பங்களிப்பு

Spread the love

வெளிநாட்டு இலங்கைத் தொழிலாளர்கள் பங்களிப்பு

சூறாவளிக்குப் பிறகு நாட்டின் மீட்க உதவுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்ட “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்”(Rebuilding Sri Lanka) நிதியத்திற்கு 19,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் பணத்தை வைப்புச் செய்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநதி ஹர்ஷன சூரியப்பெரும(Harshana Suriyapperuma) தெரிவித்துள்ளார்.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்துத் துறைகளையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான கூடுதல் நிதியைத் திரட்டுவதே இதன் நோக்கமாகும்.

இந்நிலையில், நிதி அமைச்சு மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினதும் ஒருங்கிணைப்பில் தற்போது இரண்டு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

முதலாவது வேலைத்திட்டமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து பெறப்படும் நிதி உதவிக்காக இலங்கை வங்கியில் ஒரு சிறப்புக் கணக்கு இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வேலைத்திட்டத்தின் கீழ், இந்நாட்டிற்கு பொருட்களை அனுப்புபவர்களுக்கு குறைந்த ஆவணங்கள் மற்றும் எந்த கட்டணமும் இன்றி பொருட்களை அனுப்பும் செயல்முறை இலகுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி மற்றும் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button