இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது

Spread the love

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 24 மற்றும் 25 வயதான நான்கு இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button