இலங்கை மக்களுக்கு பாப்பரசர் இரங்கல்

இலங்கை மக்களுக்கு பாப்பரசர் இரங்கல்
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வத்திக்கான் தமது ஒற்றுமையைப் பிணைந்துள்ளதாக பாப்பரசர் XIV ஆம் லியோ (Pope Leo the XIV) உறுதியளித்துள்ளதாக கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தின் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய மொன்சிஞ்ஞோர் ரொபேர்ட்டோ லூச்சினி (Rev. Monsignor Roberto Lucchini) இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்குமாறும், இந்த கடினமான தருணத்தில் இலங்கைக்கான தமது ஆதரவை உறுதிப்படுத்துமாறும் பாப்பரசர் XIV ஆம் லியோ தம்மிடம் தெரிவித்ததாக வணக்கத்துக்குரிய லூச்சினி வெளிப்படுத்தினார்.
“இந்த அனர்த்தத்தின் பின்னரான சூழ்நிலையில் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் செயற்படுமாறு பாப்பரசர் இலங்கை மக்களைக் கோரியுள்ளார்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அவசர அறிவிப்பு




