அபாயகர வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

அபாயகர வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!
நீரேந்துப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, இலங்கையின் ஆறு முக்கிய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில் ‘அபாயகர வெள்ள நிலைமை’ (Critical Flood Situations) உருவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹா ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த ஆறுகளுக்கு அண்மையில் வசிக்கும் பொதுமக்கள், தற்போது நிலவும் அதி தீவிர வெள்ள நிலைமையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த ஆறுகளின் இரு மருங்கிலும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தாமதமின்றி, உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய ராசிப்பலன் – 28.11.2025
Sri Lanka Tamil News | 28.11.2025 | இலங்கையின் பிரதான செய்திகள் | Tamilaruvitv




