அப்பாவித்தமிழ் இளைஞர்களின் அவலக்குரல்களை நாம் மறக்கலாமா?

அப்பாவித்தமிழ் இளைஞர்களின் அவலக்குரல்களை நாம் மறக்கலாமா?
2007 ம் வருடம் பெப்ரவரி மாதம் 15 ம் திகிதி சுப்பிரமணியம் இராமச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் சட்டவிரோத மண் அகழ்வு, கடத்தல் தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதியமைக்காக இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டார்.
காணாமலாக்கப்பட்ட அன்று இராமச்சந்திரனீன் சகோதரி ஜெயரத்தினம் கமலாசினி தனது சகோதரன் இரவு 8 மணியாகியும் வீடு திரும்பாத தால் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.
தான் இராணுவமுகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் , விரைவில் வீடு திரும்பிவிடுவேன் எனவும் சகோதரர் கூறியுள்ளார்.
அதிகாலை 4 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
அதிகாலை 4 மணியளவில் சகோதரியின் தொலைபேசி அழைப்பிற்கு, மேற்கொண்டு தொலைபேசியில் தன்னை அழைக்கவேண்டாம் எனவும் அதனால் தனக்கு சிக்கல் ஏற்படும் எனவும் இராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மறுதினம் தனது தந்தையுடன் தனது சகோதரனை தேடி அருகிலுள்ள இராணுவமுகாமிற்கு சென்றவருக்கு இராணுவம் வழங்கியபதில்: சுப்பிரமணியம் இராமச்சந்திரன் என்ற பெயரில் தாம் யாரையும் கைதுசெய்யவில்லை என்பதே.
ஆனாலும் இராணுவ சிவில் அலுவலகத்தில் பல நாட்களாக கமலாசினியும், அவர் தந்தையும் அலைவதைப்பார்த்த இராணுவபுலனாய்வாளர் ஒருவர் இராமச்சந்திரனை இராணுவம் ஈ.பி.டி.பியிடம் விசாணைக்காக ஒப்படைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கடத்தப்பட்டவரின் தந்தை தேவானந்தாவிடம் தன் மகன் எங்கே என்பதுடன் ஈ.பி.டி.பி அமைப்பினர் இராணுவத்துடன் சேர்ந்து ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகனைத்தேடும் ஒரு தந்தையின் மனக்குமுறலை, வலியினை சிறிதளவும் புரிந்துகொள்ளாத டக்ளஸினால் அந்த முதியவர் கடுமையாக மிரட்டுப்பட்டுள்ளார்.
டக்ளஸினால் அந்த முதியவருக்கு நீங்கள் சுடப்படுவீர்கள் என்னும் மிரட்டலும் விடப்பட்டிருக்கின்றது.
வடமராட்சி கலிகைச்சந்தியல் அவர் காணாமலாக்கப்பட்டது முதல் 2013 ம் ஆண்டு பல்லப்பை இராணுவமுகாமில் இராமச்சந்திரன் காணப்பட்டதுவரை பல கண்கண்ட சாட்சியங்கள் உள்ளது.
பொலிஸ் நிலையம் தொடக்கம் ஜனாதிபதி ஆணைக்குழு வரை தேவையான சகல இடங்களிலும் காணாமலாக்கப்பட்டவரின் உறவினர்கள் நீண்ட வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்கள்.
இதோ, 18 வருடங்கள்.
சுப்பிரமணியம் இராமச்சந்திரன் இதுவரை வீடுதிரும்பவில்லை.
நீண்ட நெடிய தேடலில் அவரின் பெற்றோர்கள் இதயம் நிறைந்த வலிகளுடன் சாவடைந்துவிட்டார்கள்.
இராமச்சந்திரனை கடத்திய இராணுவத்தினோரா அல்லது அவரை தன்வசம் எடுத்துக்கொண்ட டக்ளஸ் தேவானந்தாவோ இதுவரை இதற்கான தண்டனை எதனையும் பெறவில்லை.
வடமாகணத்தில் தமிழர்தேசமெங்கும் நிறைந்திருக்கும் மனிதபுதைகுழிகளில் டக்ளஸ் தேவானந்தாவின் கைகள் உள்ளது என்பது ஒன்றும் இரகசியமல்ல.
தமிழினவழிப்பில் சிங்களதரப்பின் கரங்களை வலுப்படுத்தி இரத்தம் தோய்ந்த கரங்களைக்கொண்ட டக்ளஸிற்கு காலம் நிச்சயம் தன் தண்டனையினை வழங்கும்.
இராமச்சந்திரன் போன்ற எண்ணற்ற அப்பாவித்தமிழ் இளைஞர்களின் அவலக்குரல்களை நாம் மறக்கலாமா?
உறையவைக்கும் கடும் குளிரில் கனடா




