Friday , 31 October 2025
பாதுகாப்புப் பிரச்சினைகள்

பாதுகாப்புப் பிரச்சினைகள் – காவல்துறை மா அதிபர்

Spread the love

மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் தடம்புரண்டு விபத்து.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, நாட்டில் எழுந்துள்ள பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக காவல்துறை மா அதிபர் இன்று (31) நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இந்தப் விசேட கலந்துரையாடல் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர், பாதுகாப்புக் கோரும் அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்துச் சபாநாயகரும் காவல்துறை மா அதிபரும் இணக்கப்பாடு கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நாடாளுமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்க்கட்சிகள் அண்மையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை தன்னிச்சையாக பின்வாங்கி இருக்கிறது.

Check Also

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மு.கா. இன் குச்சவெளி பிரதேச சபை தலைவர் கைது!

Spread the loveகுச்சவெளி பிரதேச சபையின் தலைவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது …