வைல்டு கார்டு மூலம் உள்ளே செல்லும் 4 பேர் இவர்கள் தான்
பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் புது டிவிஸ்ட் கிளம்பியுள்ளது.
0 பேருடன் தொடங்கிய பிக்பாஸ், நந்தினி பாதியில் வெளியில் போகவே, இதுவரை ஒவ்வொரு வாரமும் தலா ஒரு நபர் என 3 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர்.
கடைசி வாரத்தில் ஆதிரை எலிமினேட் ஆனார். அப்போது வெளியே வந்த அவர் என்னை விட தகுதியில்லாத ஆட்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள். ஆனால் நான் வெளியில் இருக்கிறேன். மக்கள் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என கூறிவிட்டு சென்றார்.
இந்த வாரம் லாக்கர் டாஸ்க் நடைபெறுகிறது. இதில் அனைவருக்கும் தனித்தனி யூனிஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அணிந்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை இருந்த சீசனிலேயே இந்த சீசன் தான் தகுதி இல்லாத நபர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதித்துள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், வைல்டு கார்ட் மூலம் யார் வருவார் அவர்களாவது நன்றாக விளையாடுவார்களா என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
அதன் சூப்பர் அப்டேட் தான் தற்போது வெளியகியுள்ளது. பொதுவாக பிக்பாஸில் வைல்டு கார்ட் எண்ட்ரி 50வது நாளின் அருகில் இருக்கும். ஆனால் இந்த சீசனில் 30 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் போட்டியாளர்களை அறிவித்துவிட்டது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இதுவரை எந்த சீசனிலுமே வைல்டு கார்டு போட்டியாளர்கள் யார் என்பதை முன்னரே அறிவிக்கப்பட்டதில்லை. திடீரென உள்ளே குதிப்பார்கள். அல்லது வார இறுதியில் தொகுப்பாளர், அவர்களை வெல்கம் செய்து உள்ளே அனுப்புவார். இதுவே வழக்கமாக இருந்தது.
அப்படி இந்த சீசனில் வைல்டு கார்ட் மூலம் உள்ளே வரும் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதாவது சின்னத்திரை, வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகர் பிரஜின், மேலும் சின்னத்திரை பிரபலங்களான சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா ஆகியோர் உள்ளே வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரஜினும், சாண்ட்ராவும் ரியல் ஜோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் பாலாஜி மற்றும் அவரது மனைவி ஒரே சீசனில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news
				 
		