’கொம்புசீவி’ திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு
சண்முக பாண்டியன் – சரத்குமர் இணைந்து நடிக்கும் கொம்புசீவி திரைப்படமானது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஆவார். இவர் கடந்த 2015ல் வெளியான சகாப்தம் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் ஜல்லிக்கட்டு அரசியலை அடிப்படையாகக் கொண்ட மதுர வீரன் என்ற படம் 2018ல் வெளியானது. இதனை தொடர்ந்து கொம்புசீவி என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார்.
பொன்ராம் இயக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிகிறார். மேலும் காளி வெங்கட், கல்கி ராஜா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், கொம்புசீவி திரைப்படமானது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளது!




