பிக்பாஸில் இருந்து வெளியேறிய வியானாவின் சம்பளம்.., எத்தனை லட்சங்கள் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
கடந்த 8ஆவது சீசன் முதல் புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கி சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கிவருகிறார்.
பிக்பாஸின் இந்த சீசனில் பல போட்டியாளர்கள் செய்யும் செயல்கள் முகம் சுழிக்க வைக்கும் வகையில் உள்ளன.
விஜய் சேதுபதியின் எச்சரிகையையும் மீறிய செயல்பாடுகளும் நிகழ்ச்சியில் நடந்துள்ளன.
கடந்த வாரம் நடைபெற்ற வழக்காடு மன்றம் டாஸ்க்கில் பலரும் புகார் தெரிவித்து அதற்கு நீதி பெற போராடினர்கள்.
இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் ரம்யா ஜோ மற்றும் வியானாவும் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் வியானாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், மொத்தம் 70 நாட்கள் உள்ள இருந்த வியானாவுக்கு ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, மொத்தம் 70 நாட்களுக்கு வியானா ரூ.10 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.




