Bigg Boss 9

பிக் பாஸ் 9: ரெட் கார்டு வாங்கியதால் ஏற்படும் பிரச்னைகள்!

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதி மற்றும் நடிகர் கமருதீன் ஆகியோர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதால், நிகழ்ச்சியால் பெறக்கூடிய சலுகைகளை பெற முடியாத நிலை இருவருக்கும் ஏற்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 14 வது வாரத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில், 13வது வாரம் முழுக்க நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுபவருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.

மொத்தம் 8 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அதிக புள்ளிகளைப் பெற்று அரோரா நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

காருக்குள் அதிக நேரம் தாக்குப்பிடிப்பதே 8வது போட்டியாக நடத்தப்பட்ட நிலையில், அதில் அநாகரிகமாக நடந்துகொண்டதற்காக விஜே பார்வதி மற்றும் கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நடிகை சான்ட்ராவை போட்டி விதிகளுக்கு புறம்பாக மனிதாபிமானமற்ற முறையில் காரில் இருந்து உதைத்து வெளியேற்றியதற்காகவும், அநாகரிகமாக தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசியதாலும் விஜே பார்வதியும் கமருதீனும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது நடிகர் கமல் பிக் பாஸ் தொகுப்பாளராக இருந்தார்.

தற்போது விஜய் சேதுபதி ரெட் கார்டு கொடுத்டு விஜே பார்வதியையும் கமருதீனையும் வெளியேற்றியுள்ளார்.

இனி இதெல்லாம் சாத்தியமில்லை

விஜே பார்வதி – கமருதீன் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறியதால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் இருவராலும் பங்கேற்க முடியாது.

விஜே பார்வதி – கமருதீனுக்கு நிகழ்ச்சி ஒப்பந்தப்படி ஊதியம் கொடுக்கப்படாது எனக் கூறப்படுகிறது. அதாவது 90 நாள்கள் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததற்கான ஊதியம் கொடுக்கப்படாது.

அதோடுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் மீண்டும் எந்தவொரு காரணத்திற்காகவும் அவர்களால் நுழைய முடியாது. அவர்கள் இனி எந்தவொரு படம், இணையத்தொடரில் நடித்தாலும் அதன் புரோமோக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறாது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் ரீயூனியன் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, அதில் பங்கேற்க முடியாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button